Sunday, July 1, 2018

குலதெய்வ வழிபாடு



குலதெய்வ வழிபாடு 


                                                             குலத்தை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகவே நாம் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் நம் குலதெய்வத்தின் ஆசியும் அருளையும் பெற்று செய்தால் நாம் செய்யும் காரியங்கள் மிக எளிதில் வெற்றியை தேடித்தரும்.
                                                             
                                                                     இன்றைய நாளில் இஷ்ட தெய்வ வழிபாடு அதிகமாக காணப்படுக்கின்றதே தவிர குலதெய்வ வழிபாடு மிக குறைவே, இதற்கு நாம் நம் பொருளாதாரத்தை பெருக்குவதற்காகவும் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காகவும்  இடம் பெயர்ந்து வாழ்வதே முக்கிய காரணம். நம் குடும்பம் வளர்ந்து தழைக்கவும், செல்வ செழுமையுடன் சந்ததிகள் வாழவும் குலதெய்வ வழிபாடு மிக முக்கியம்.


                                                                     நம் முன்னோர்கள்  வழி வழியாக அவர்களின்  மூதாதையர்களின் ஆசி, அருளைப்பெற்று வாழ  வழிபடுவதே குலதெய்வ வழிபாடாகவும் கருதப்படுகின்றது. எனவே நாம் குலதெய்வ வழிபாட்டை மிக  முக்கிய வழிபாடாக கருதவேண்டும். இல்லத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் குலதெய்வத்தை வழிபட்ட பின் செய்தால் குலம் தழைக்கும்.

                                                               குலதெய்வம் தெரியாதவர்கள் அவதார புருஷனாகிய பெருமானை  ( ஏழுமலையானை ) தன் குலதெய்வமாக நினைத்து வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். ( ஜோதிட முறையில் நம் ஜாதகத்தின் அடிப்படையில் நம் குலதெய்வம் ஆண் தெய்வமா அல்லது பெண் தெய்வமா என்றும் எந்தமாதிரியான குணம் அதாவது சாந்த குணமுடையதா அல்லது ஆக்ரோஷ குணமுடைய தெய்வமா என்றும் எந்த திசையில் உள்ளது என்றும் நம் பூர்விகத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்றும் எந்த மாதிரி தன்மையுடைய இடத்தில் உள்ளது என்று கூறமுடியுமே தவிர இந்த தெய்வம்தான் என்று ஆணி தரமாக கூற முடியாது என்பது அடியேனின் கருத்து ).

எனவே குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டு அனைத்து நன்மைகளும் பெற்று நலமுடனும் வளமுடனும் வாழ்வோம்.

உங்கள் ஜோதிடர்.
ஞானகுணாளன் 
      9486402680

குலதெய்வ வழிபாடு

குலதெய்வ வழிபாடு                                                                குலத்தை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகவே நாம் எந...